ராஜஸ்தானில் ஆசிரியர் பணிக்கான ஆட்தேர்வு தொடர்பான போராட்டத்தில் வன்முறை

0 788
ராஜஸ்தானில் ஆசிரியர் பணிக்கான ஆட்தேர்வு தொடர்பான போராட்டத்தில் வன்முறை

ராஜஸ்தானில் ஆசிரியர் பணிக்கான ஆட்தேர்வு தொடர்பாக நடைபெற்ற, போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு முதல், பழங்குடியினர் பிரிவில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதை கண்டித்து, துங்கர்பூர் தேசிய நெடுஞ்சாலையையில், ஆசிரியர் பணிக்காக தேர்வு எழுதி காத்திருக்கும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை கலைக்க முயன்றபோது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை கலைத்தனர்.

இந்த தாக்குதலில் போலீசார் சிலர் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், ஏராளமான வாகனங்களுக்கு போராட்டகாரர்களால் தீ வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments