கொரோனா சடலத்தையும் விட்டுவைக்கவில்லை... மோதிரம், செல்போன் திருடும் அவலம்!

0 4446

திருப்பதியில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக மரணமடைந்தவரின் உடலிலிருந்த தங்க மோதிரம், செல்போன் ஆகியவற்றை மருத்துவமனை ஊழியர் ஒருவர் திருடும் காணொளி வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள சவடேப்பள்ளியைச் சேர்ந்தவர் வெங்கட் ரத்னம் நாயுடு. கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காகத் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கட் ரத்னம், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.  

இந்த நிலையில், தந்தையின் உடலைப் பார்ப்பதற்காக வெங்கட்ரத்தினத்தின் மகன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது, வெங்கட் ரத்தினத்தின் கையில் அணிந்திருந்த தங்க மோதிரம் மற்றும் செல்போன் திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் புகாரளித்தார் வெங்கட்ரத்தினத்தின் மகன்.
பாதுகாப்பு ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, வெங்கட் ரத்தினம் மருத்துவமனைக்குள் செல்லும் போது கையில் தங்க மோதிரம் அணிந்திருந்ததும், இறந்தபிறகு மோதிரம் மற்றும் செல்போனை ஊழியர் ஒருவர் திருடுவதும் பதிவாகியிருந்தது. மோதிரத்தைத் திருடும் ஊழியர் பாதுகாப்பு கவசம் அணிந்துள்ளார். அதனால், அவர் யார் என்று மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது...

கொரோனாவால் பலியானவரின் விரலிலிருந்து மோதிரத்தையும் விட்டுவைக்காத மருத்துவமனை ஊழியரின் செயல்  பொதுமக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது!  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments