போதை பொருள் விவகாரத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் இன்று விசாரணை...

0 1455

போதைப் பொருள் விவகாரத்தில் நடிகைகள் தீபிகா, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

போதை பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரிக்க நடிகைகள், சாராஅலிகான், தீபிகா படுகோன், ரகுல் பிரீத்சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதை தீபிகா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், நாளை விசாரணைக்கு ஆஜராவதற்காக கணவர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து கோவாவில் இருந்து மும்பை வந்து சேர்ந்தார்.

இந்நிலையில், நடிகை ரகுல் பிரீத்சிங்கிடம் இன்றும், சாரா அலிகான் மற்றும் ஷ்ரத்தா கபூரிடம் நாளையும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதனிடையே, நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் ஜாமீன் வழக்கு விசாரணை வரும் 29 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments