ரயில் எஞ்ஜினுக்கு அடியில் சிக்கிய 2 வயது சிறுவன்..! சிறு கீறல் கூட இல்லாமல் காப்பாற்றிய ரயில் ஊழியர்கள்..!

0 3746

அரியானாவில் ரயிலின் எஞ்ஜினுக்கு அடியில் சிக்கிய 2 வயது சிறுவனை, சாதூர்யமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில் ஊழியர்களுக்கு ரயில்வேதுறை பரிசு அறிவித்துள்ளது.

பரிதாபாத்துக்கு அருகே சிறுவன் ஒருவனை அவனது மூத்த சகோதரன் என்று கருதப்படும் சிறுவன், ரயில் வரும் போது தண்டவாளத்தில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட ஓட்டுநர் உடனடியாக அவரச ப்ரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தி, கீழே இறங்கி பார்த்தபோது எஞ்ஜினுக்கு அடியில் சிறுவன் சிக்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறு கீறல் கூட இல்லாமல் சிறுவனை மீட்டு ரயில் ஊழியர்கள், தாயிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments