தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 6385
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், தென் தமிழகத்திலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் வானம் தெளிவாக காணப்படும் என்றும் அதிக பட்சமாக 96.8 டிகிரி பாரன்ஹீட் முதல் குறைந்த பட்சமாக 78.8 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments