'உன் பெற்றோரிடம் சொல்லி விடுவேன்!'- சென்னை சிறுமி தற்கொலையில் சிக்கினான் கயவன்!

0 41136
குணசீலன்

சென்னை வேளச்சேரி காந்தி நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்து 13 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம், 14- ஆம் தேதி தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், தற்கொலைக்கான காரணம் குடும்பத்தினருக்கோ, உடன் பயிலும் தோழிகளுக்கோ தெரியவில்லை. இதற்கிடையே சிறுமியின் தாயார் செல்போனை ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமான குறுந்தகவல் இருந்தது. அதில் "உன் பெற்றோரிடம் தெரிவித்துவிடுவேன்" என்ற தகவல் மட்டும் சொல்லப்பட்டிருந்தது.

இந்த குறுந்தகவல் சிறுமி தற்கொலை செய்துகொண்ட தினத்தில் அனுப்பப்பட்டிருந்தது. அந்த குறுந்தகவலை அனுப்பியது சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த 33 வயதான குணசீலன் என்கிற நபர் என்பதும் தெரிய வந்தது. சிறுமி தற்கொலை செய்து கொண்ட அதே நாளில் குணசேகரன் மாயாமானார். தரமணி கல்லுக்குட்டை பகுதியில் குணசீலனைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில் குணசீலன் தான் அப்படி எந்தவொரு குறுந்தகவலையும் அனுப்பிவில்லை என்று மறுத்தார். குணசீலனின் செல்போனைக் கைப்பற்றி, சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பி ஆய்வு செய்து, அழிக்கப்பட்ட பல குறுஞ்செய்தி தகவல்கள் மீட்கப்பட்டன. அதில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு செய்து மிரட்டல் விடுத்த குறுஞ்செய்தி மட்டுமில்லாமல், சிறுமியுடன் குணசீலன் நெருக்கமாக இருக்கும் படங்கள் மற்றும் சிறுமியின் ஆபாச படங்கள், வீடியோக்களும் இருந்தன.

தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் பெற்றோர் இரண்டு பேருமே வேலைக்கு சென்றுவிடுவார்கள். இதனால், சகோதரர் முறையில் பழகி வந்த குணசீலன் தான் சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்று, அழைத்து வந்துள்ளார். அண்ணன் போல பழகி வந்த குணசீலனின் மறுமுகம் பெற்றோருக்குத் தெரியவில்லை. இதனால், அவர்களுக்கு எந்தவித சந்தேகமும் எழவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் தான், வீட்டில் தனியாக இருக்கும் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளான் குணசீலன். அதைப் படம் பிடித்து வைத்து, மிரட்டத் தொடங்கியுள்ளான்.

நாளடைவில் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டி பாலியல் ரீதியாக சிறுமியைத் துன்புறுத்தியுள்ளான். ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி தனது பெற்றோரிடம் கூறப்போவதாக அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த குணசீலன், உன் தாயாரின் செல்போனுக்கு என்னிடம் உள்ள ஆபாசப் படங்களை அனுப்பி விடுவேன்' என்று மிரட்டியுள்ளான். இதனால், பயந்து போன சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதற்கிடையே, சென்னையிலிருந்து தப்பிய குணசீலன் கோவை மாவட்டம் வால்பாறையில் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்து போலீஸார் கைது செய்தனர். தற்பொது, சென்னைக்குக் கெண்டு வரப்பட்டுள்ள குணசீலனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments