தேர்தலில் தோல்வியடைந்தால் அதிகாரத்தை அமைதியான முறையில் கைமாற்ற முடியாது... டொனால்டு டிரம்ப்

0 3959
தேர்தலில் தோல்வியடைந்தால் அதிகாரத்தை அமைதியான முறையில் கைமாற்ற முடியாது... டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்தால் அதிகாரத்தை அமைதியான முறையில் கைமாற்ற முடியாது என்றும், நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்றும் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பல மாநிலங்கள் அஞ்சல் முறையில் வாக்களிக்க அனுமதிக்க முடிவு செய்துள்ளன.

இந்தத் தேர்தலில் ஒருவேளை தோல்வியடைந்தால் அதிகாரத்தை அமைதியான முறையில் கைமாற்றி விடுவீர்களா என டொனால்டு டிரம்பிடம் செய்தியாளர் ஒருவர் வினவினார்.

அதற்கு அஞ்சல் வாக்கு முறையில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதால், தோல்வியடைந்தால் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியதிருக்கும் என்றும் டிரம்ப் பதிலளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments