போதைப்பொருள் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் லஞ்ச பேரம் நடத்திய குற்றச்சாட்டில் 2 போலீசார் சஸ்பெண்ட்

0 725
போதைப்பொருள் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் லஞ்ச பேரம் நடத்திய குற்றச்சாட்டில் 2 போலீசார் சஸ்பெண்ட்

கன்னட திரையுலக பிரபலங்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள நபரிடம், லஞ்ச பேரம் நடத்திய குற்றச்சாட்டில், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் உள்ளிட்ட 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை நடிகைகள் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், வீரேன் கண்ணா எனும் சப்ளையரிடம் விசாரணை நடத்திய உதவி ஆணையர் மாதவி, ரூபாய் 50 லட்சம் தந்தால் வழக்கில் இருந்து விடுவிக்க வழி செய்வதாக கூறியதாகவும்,  இந்த பேரத்திற்கு மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் மல்லிகார்ஜூனா உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மாதவி, மல்லிகார்ஜூனா இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments