குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

0 1003
குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

விசாரணையின் போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் புழக்கத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவே திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு குட்கா பொட்டலங்களை எடுத்து வந்ததாகவும், உரிமை குழுவின் நோட்டீசில் அடிப்படை தவறு இருப்பதாக ரத்து செய்து தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இந்த விவகாரத்தில் மீண்டும் அனுப்பப்பட்டுள்ள உரிமைக் குழுவின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்றும் திமுக தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து, சட்டமன்ற உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க அடிப்படை முகந்திரம் உள்ளதாக கூறி தடை விதித்த நீதிபதி, மனு குறித்து சட்டப்பேரவை செயலாளர், உரிமைக்குழு தலைவர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments