நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி 25 பேர் உயிரிழப்பு

0 1169
நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி 25 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர்.

அங்குள்ள லகோஜா என்ற இடத்தில் எரிபொருளை ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் பிரேக் பழுதானதால், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதியது.

இதனால் எரிபொருள் கொட்டியதில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்பட 25 பேர் நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments