பொருளாதாரத்தை மீட்க, தளர்வுகளை அதிகப்படுத்துங்கள்... மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

0 3159
பொருளாதாரத்தை மீட்க, தளர்வுகளை அதிகப்படுத்துங்கள்... மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஊரடங்கின்போது ஏற்பட்ட பொருளாதாரத்தை மீட்க, தளர்வுகளை அதிகப்படுத்தும்படி கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில் மகாராஷ்ட்ரா , டெல்லி, தமிழ்நாடு,ஆந்திரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் டெல்லியில் 65 சதவீத பாதிப்புகள் இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.

சிகிச்சை பெற்று வருவோரில் 63 சதவீதத்தினரும் இந்த மாநிலங்களில் தான் என்றும் இந்த ஏழு மாநிலங்கள் மொத்த பாதிப்பில் 77 சதவீதம் மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் மோடி தெரிவித்தார்.

கொரோனா பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, கண்காணிப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

மொத்தம் 60 மாவட்டங்களே மிகப்பெரிய நோய்ச்சுமையை சுமப்பதால் அவை தனி கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் மோடி கூறினார்.

ஒருநாள் இரண்டு நாள் ஊரடங்குகளை மாநில அரசுகள் விதிப்பதற்கும் மோடி கடும் அதிருப்தி தெரிவித்தார். இயல்பான பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சரக்குகள் விநியோகத்திற்கு மாநில அரசுகள் தடைவிதித்ததால் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதையும் மோடி சுட்டிக் காட்டினார்.

உள்துறை அமைச்சகத்ததின் வழிகாட்டல் இல்லாமல் தன்னிச்சையாக மாநில அரசுகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதை கைவிட வேண்டும் என்று மோடி குறிப்பிட்டார். முகக்கவசம் அணிவதை வலியுறுத்திய பிரதமர் அதை மக்களிடம் ஒரு பழக்கமாக ஆக்கும்படி வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments