பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி..டிஆர்டிஒ குழுவினருக்கு அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு..!

0 3241
பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணையை டிஆர்டிஒ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணையை  டிஆர்டிஒ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகரில் நடைபெற்ற சோதனையில், லேசர் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஏவுகணை, எம்பிடி அர்ஜூன் பீரங்கியில் இருந்து ஏவப்பட்டது.

3 கிலோமீட்டர் தொலைவில் இருந்த இலக்கை அந்த ஏவுகணை தாக்கி அழித்துள்ளதாக டிஆர்டிஒ எனப்படும் ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனை பாராட்டி,பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், வெளிநாட்டு ஆயுத இறக்குமதியை குறைக்கும் வகையில் செயல்படும் டிஆர்டிஒ குழுவினரால் இந்தியா பெருமை அடைவதாக குறிப்பிட்டுள்ளார். 

.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments