மாநிலங்களவையில் 3 தொழிலாளர் மசோதாக்கள் நிறைவேற்றம்

0 1087
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் லேபர் கோட்ஸ் எனப்படும் 3 தொழிலாளர் துறைக்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் லேபர் கோட்ஸ் எனப்படும் 3 தொழிலாளர் துறைக்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தொழில் நிறுவனங்கள் பணி செய்வதற்கான ஆட்களை தேர்வு செய்யவும், நீக்கவும் செய்வதற்கான சலுகைகளை இந்த சட்டங்கள் வழங்குகின்றன. தொழிற்சங்கத்தின் தலையீட்டை குறைக்கவும், சமூக பாதுகாப்பு அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை புறக்கணித்த எதிர்க்கட்சிகள், ஜனநாயகத்திற்கு கறையை ஏற்படுத்தும் இந்த மசோதாக்களை நிறைவேற்றக் கூடாது என்று அவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியிருந்தன.

எனினும் மக்களவையை தொடர்ந்து தற்போது மாநிலங்களவையிலும், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக வெங்கையாநாயுடு அறிவித்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னதாகவே கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments