திருவாரூர் விவசாய நிலம் வழியே செல்லும் ஓஎன்ஜிசி நிறுவன குழாயில் மீண்டும் கசிவு, பயிர்கள் பாதிப்பு

0 1518
திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகே ஓஎன்ஜிசி நிறுவன குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டு 1 ஏக்கர் பரப்பு விவசாய நிலத்தில் கச்சா எண்ணெய் பரவியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகே ஓஎன்ஜிசி நிறுவன குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டு 1 ஏக்கர் பரப்பு விவசாய நிலத்தில் கச்சா எண்ணெய் பரவியுள்ளது.

மேல இருக்காட்டூர் கிராமத்திலுள்ள விவசாயி தனசேகரின் நிலத்தில் பூமிக்கடியே 9 குழாய்கள் அமைக்கப்பட்டு c கொண்டு செல்லப்படுகிறது. கடந்த ஆண்டு கசிவு ஏற்பட்ட நிலையில் நேற்றிரவு மீண்டும் கசிவு ஏற்பட்டதால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதை அகற்றி, மண்ணை மாற்றினால்தான் விவசாயம் செய்ய முடியும் நிலை நேரிட்டுள்ளது. தகவலின்பேரில் ஓஎன்ஜிசி அதிகாரிகள், கச்சா எண்ணெய்யை அகற்ற வந்தநிலையில், ஏற்கெனவே மண் மாற்றியதற்கு ஆன தொகையை தராமல் அகற்றகூடாது என தனசேகர் வலியுறுத்தினார். இதனால் அவருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments