திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியில் இருந்த கரும்புகளை பதம் பார்த்த யானைகள்

0 2025
திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியில் இருந்த கரும்புகளை பதம் பார்த்த யானைகள்

திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியில் இருந்த கரும்புகளை யானைகள் போட்டி போட்டுத் தின்றன.

மைசூர் பகுதியில் இருந்து கரும்பு லாரிகள் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்வதற்காக திம்பம் வழியாக பயணிப்பது வழக்கம்.

இன்று அதிகாலை 3 மணியளவில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த கரும்பு லாரி பழுதானது. லாரி ஓட்டுநர் மெக்கானிக்கை அழைத்து வர சென்ற நிலையில், கரும்பின் வாசனையறிந்த காட்டு யானைகள் பழுதான லாரியை நோக்கி படையெடுத்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments