நடிகையின் பாலியல் புகாரின் பேரில் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு

0 1309
நடிகையின் புகாரையடுத்து இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்

நடிகை பாயல் கோஷ் அளித்த பாலியல் புகாரின் பேரில் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாம்பே வெல்வட் படப்பிடிப்பில் தம்மிடம் அனுராக் காஷ்யப் பலவந்தம் செய்தார் என்று நடிகை பிரதமர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் நடந்து பல வருடங்களாகி விட்டது என்ற போதும் தன் மனதை உறுத்திக் கொண்டிருப்பதால் புகார் அளிப்பதாக பாயல் கோஷ் கூறினார்.

ஆனால் தம் மீதான புகார்களை அனுராக் காஷ்யப் மறுத்துள்ளார் .இதுபோல் தாம் என்றும் யாரிடமும் நடந்துக் கொண்டதில்லை என்று அனுராக் காஷ்யப் டிவிட்டரில் மறுப்பு வெளியிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments