தொழிலாளர் நலன் சார்ந்த 3 மசோதாக்கள் மக்களவையில் நேற்று நிறைவேற்றம்

0 725
தொழிலாளர் நலன் சார்ந்த 3 மசோதாக்கள் மக்களவையில் நேற்று நிறைவேற்றம்

தொழிலாளர் நலன் சார்ந்த 3 மசோதாக்கள், மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.

கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிபந்தனைகள் மசோதா, தொழில்துறை உறவுகள் மசோதா மற்றும் சமூக பாதுகாப்பு மசோதா மீதான வாக்குவாதம் நேற்று நிறைவடைந்து 3 மசோதாக்களும் நிறைவேறின.

முன்னதாக மசோதா மீதான விவாதங்களுக்கு பதிலளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார், 3 மசோதாக்களும் நாட்டின் 50 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு ஊதிய பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் சரியான பணிச்சூழலை வழங்கும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments