திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கருடசேவை: 7 டன் மலர்களால் கோவில் அலங்கரிப்பு

0 9832
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கருடசேவை: 7 டன் மலர்களால் கோவில் அலங்கரிப்பு

கருட சேவையை முன்னிட்டு 7 டன் மலர்களால் திருப்பதி ஏழுமலையான் கோயில் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு ,கர்நாடகா , ஆந்திரா மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 7 டன் அளவுள்ள பல்வேறு மலர்களாலான தோரணங்களால் ஏழுமலையான் கோயில் அலங்கரிக்கப்பட்டு மின் விளக்குகளால் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

இன்று திருப்பதி வரவிருக்கும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திருமலையில் உள்ள அன்னமய பவனில் பிரதமர் மோடியுடன் காணொலிக் காட்சியின் வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பிறகு திருப்பதி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கும் அவர் கருடசேவையில் பங்கேற்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments