இந்தியா சீனா பேச்சுவார்த்தை: முன்களத்துக்கு மேலும் படைகளை அனுப்புவதை நிறுத்த இருதரப்பும் ஒப்புதல்

0 1504
இந்தியா சீனா பேச்சுவார்த்தை: முன்களத்துக்கு மேலும் படைகளை அனுப்புவதை நிறுத்த இருதரப்பும் ஒப்புதல்

இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், எல்லைக்கு மேலும் படைகளை அனுப்பக் கூடாது என்று இருதரப்பினரும் முடிவு செய்துள்ளனர். ஆயினும் தற்போதுள்ள படைகளைப் பின்வாங்கும் விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்திய சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை திங்கட்கிழமை தொடங்கி 14 மணி நேரம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் படைகளைப் பின்வாங்க இந்தியா வலியுறுத்திய போதும் சீனா அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

சீனா தரப்பில் படைகளை விலக்கிக் கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், குளிர்காலத்திலும் தற்போதுள்ள இடங்களில் இருந்து பின்வாங்காமல் நிலைத்திருக்க தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு பின் இரு நாட்டு ராணுவம் தரப்பில் கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முன்களத்திற்கு மேலும் படைகளை அனுப்பக் கூடாது என்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் பதற்றத்தைத் தணிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்றும் தகவல் தொடர்புகளை பலப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கள நிலவரத்தை மேலும் சிக்கலாக மாற்றுவதற்கான எந்த செயலையும் செய்யக் கூடாது என்று இரு நாட்டு ராணுவமும் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments