கொரோனா பாதிப்புக்கு சீனா பொறுப்பேற்க ஐ.நா. வலியுறுத்த வேண்டும் - அதிபர் டிரம்ப்

0 1350
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்புக்கு, சீனாவை பொறுப்பேற்க, ஐ.நா. வலியுறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்புக்கு, சீனாவை பொறுப்பேற்க, ஐ.நா. வலியுறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையின் 75வது கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பேசிய அவர், கொரோனா வைரஸ் தொற்றால் 188 நாடுகளில் எண்ணிலடங்கா உயிர்கள் பலியாகி இருப்பதை சுட்டிக்காட்டினார்.

சீன அரசும், உலக சுகாதா அமைப்பும், கொரோனா வைரஸ் பரவல் குறித்து தவறான தகவல்களை அளித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

கொரோனா பரவிய ஆரம்ப காலகட்டத்தில், சீனாவின் உள்நாட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட போதும், வெளிநாடுகளுக்கு விமானங்களை செல்ல அனுமதித்து கொரோனா தொற்றை பரவ விட்டு விட்டதாக டிரம்ப் சாடினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments