எல்லை அருகே பாகிஸ்தான் ட்ரோன் வீசிச் சென்ற ஆயுதங்களை இந்திய ராணுவம் கைப்பற்றியது

0 1371
ஜம்மு-காஷ்மீரின் அக்னூர் பகுதியில், பாகிஸ்தான் ட்ரோன் வீசிச் சென்ற ஆயுதங்களை இந்திய ராணுவம் கைப்பற்றியது

ஜம்மு-காஷ்மீரின் அக்னூர் பகுதியில், பாகிஸ்தான் ட்ரோன் வீசிச் சென்ற ஆயுதங்களை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது.

கடந்த ஜூன் 20ஆம் தேதி, ஆயுதங்களுடன் வந்த பாகிஸ்தான் ட்ரோன், எல்லைப் பாதுகாப்பு படையினரால், கதுவா மாவட்டத்தின் ஹிராநகர் செக்டாரில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்நிலையில், அக்னூர் செக்டாரில் வறண்ட நீரோடையில், ஏ.கே.47 துப்பாக்கிகள் இரண்டையும், அதற்கான 90 ரவுண்டு தோட்டாக்களையும், கைத்துப்பாக்கியையும் பாகிஸ்தான் ட்ரோன் வீசிவிட்டு சென்றுள்ளது. அவற்றை ராணுவமும், ஜம்மு-காஷ்மீர் போலீசாரும் கைப்பற்றியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments