என்ஐஏ அதிகாரிகள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தீவிரவாத தொடர்புடைய 2 பேரை கைது செய்தனர்

0 606
என்ஐஏ அதிகாரிகள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தீவிரவாத தொடர்புடைய 2 பேரை கைது செய்தனர்

தீவிரவாத தொடர்பு உள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை என்ஐஏ அதிகாரிகள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

சவூதி அரேபியாவில் இருந்து வந்த இவர்களில் ஒரு நபருக்கு லஷ்கரே தொய்பாவுடனும், மற்றவருக்கு இந்தியன் முஜாஹிதீனுடம் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களில் குல் நவாஸ் என்பவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் சுஹைப் என்பவர் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இந்த இரண்டு பேரும்  2008 பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமும் ரா மற்றும் பல்வேறு விசாரணை அமைப்பு அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments