49 இந்திய மீனவர்களை கைது செய்த பாகிஸ்தான் கடற்படை - குஜராத் முதலமைச்சர் தகவல்

0 481
49 இந்திய மீனவர்களை கைது செய்த பாகிஸ்தான் கடற்படை - குஜராத் முதலமைச்சர் தகவல்

பாகிஸ்தான் கடற்படையினர் குஜராத்தைச் சேர்ந்த 49 மீனவர்களை கைது செய்துள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய அவர், போர்பந்தரில் இருந்து 6 படகுகளிலும், கிர் சோம்நாத் பகுதியிலிருந்து 2 படகுகளிலும் கடலுக்குச் சென்ற 49 மீனவர்கள்,  எல்லை தாண்டியதாக கடந்த 15-ம் தேதி பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டதாக கூறினார்.

அவர்களின் 8 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் விஜய் ரூபானி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments