கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. காவிரி ஆற்றில் 75,000 கனஅடி நீர் திறப்பு

0 5095
கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. காவிரி ஆற்றில் 75,000 கனஅடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து 75 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுவதால் தமிழகத்திற்கு வரும் காவிரிநீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பிவிட்டதால், உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 35 ஆயிரம் கன அடி என 75 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்றிரவு 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, பில்லூர் அணை நிரம்பி வருவதால் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு 9,723 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 101 அடியைக் கடந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 102 அடியைக் கடந்தவுடன் உபரிநீர் திறந்துவிடப்படும் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments