மகாராஷ்ட்ராவில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 20 பேர் உயிரிழப்பு

0 1298
மகாராஷ்ட்ராவில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 20 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

பிவண்டி பகுதியில் படேல் காம்பவுண்டில்  இருந்த கட்டடம்  நேற்று அதிகாலை இடிந்து விழுந்ததில், கட்டடத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

சுமார் 36 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணி 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பாக 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments