பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 1069
பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால் ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்றிரவு 10 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.08 அடியாகவும், நீர் இருப்பு 29.5 டிஎம்சி யாகவும் இருந்தது.

இந்நிலையில் அணையின் நீர் மட்டம் 102 அடியை எட்டியவுடன் பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும் என்பதால் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த அணையில்இருந்து வெளியேற்றப்படும் நீரால் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments