முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரத்தில் இன்று ஆய்வு

0 722
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரத்தில் இன்று ஆய்வு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று புறப்பட்ட அவர் இரவில் மதுரையில் தங்கினார். இன்று காலை ராமநாதபுரத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

பின்னர் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

இதனை தொடர்ந்து சிறு, குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள்,  விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும்  மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் முதலமைச்சர் கலந்தாய்வு கூட்டம் நடத்துகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments