உலகிலேயே முதன் முதலாக ஹைட்ரஜனைப் பயன்படுத்தி விமானத்தை இயக்க ஏர்பஸ் நிறுவனம் முடிவு

0 1839
உலகிலேயே முதன் முதலாக ஹைட்ரஜனைப் பயன்படுத்தி விமானத்தை இயக்க ஏர்பஸ் நிறுவனம் முடிவு

உலகிலேயே முதன் முதலாக ஹைட்ரஜனைப் பயன்படுத்தி விமானத்தை இயக்க ஏர்பஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஹைட்ரஜன் ஒரு தூய்மையான எரிபொருள் என்றும், அது நீராவியை மட்டுமே வெளியிடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் காற்று மாசு பெருமளவு குறைக்கப்படும் என்று கூறியுள்ள ஏர்பஸ் நிறுவனம், வரும் 2035ம் ஆண்டில் இந்த விமானத்தை இயக்குவதே தங்கள் லட்சியம் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹைட்ரஜன் தொழில்நுட்பம் மூலம் ராக்கெட்டுகள் செலுத்தப்பட்டு வருவதால் விமான பயணத்தில் அது சாத்தியமாகும் என அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments