காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் படுகாயம்

0 728
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் படுகாயம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் காயமடைந்தார்.

புட்காம் மாவட்டத்தின் சார் ஐ ஷரீப் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் 2 முதல் 3 தீவிரவாதிகள் இருக்கலாம் என்றும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments