கொரோனாவை கையாளுவதில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை இல்லை என பிரிட்டனில் நடத்திய ஆய்வில் தகவல்

0 706
பிரிட்டனில் கொரோனா தொற்றை கையாளுவதில் மக்களின் நம்பிக்கையை பிரதமர் போரிஸ் ஜான்சன் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் கொரோனா தொற்றை கையாளுவதில் மக்களின் நம்பிக்கையை பிரதமர் போரிஸ் ஜான்சன் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் போரிஸ் ஜான்சன் ரகசியமாக நடத்திய ஆய்விலேயே இது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டனில் மூன்றில் ஒருவர் மட்டுமே அரசின் சமூக இடைவெளி விதியை பின்பற்றுவதாகவும், கொரோனா தொடர்பான மக்களின் பீதி அதிகரித்து வருவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

விரைவில் நாடு தழுவிய ஊரடங்கை கொண்டு வர போரிஸ் அரசு திட்டமிட்டு வரும் நிலையில், இந்த ஆய்வறிக்கையானது பிரதமருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டனில் வெறும் 26 சதவீத மக்கள் மட்டுமே, போரிஸ் ஜான்சன் நிர்வாகம் இந்த கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments