அண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு : கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள்

அண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பேட்ஜ் அணிந்து பேராசிரியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பேட்ஜ் அணிந்து பேராசிரியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிர்வாக வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து, பெயரை மாற்ற வழி வகை செய்யும் மசோதா கடந்த 16-ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், 42 ஆண்டு கால சிறப்புமிக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால் மாணவர்களின் சான்றிதழ்களில் பாதிப்பு ஏற்படுவதுடன், வெளிநாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கேள்வி குறியாகும் எனக் கூறி பேராசிரியர் சங்கம் சார்பில் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments