திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் கார் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்

0 929
திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் கார் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்

திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் காரை, மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிய நிலையில் அதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தட்டார்மடம் அருகே செல்வன் மரண விவகாரத்தில், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4வது நாளாக போராடி வருகின்றனர்.

அவர்களை சந்தித்து திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்ததோடு, போராட்டத்திலும் பங்கேற்ற நிலையில் அவரது சொந்த ஊரான தண்டபத்திலுள்ள வீட்டு முன்பு நின்றிருந்த காரை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments