ஏர் இந்தியா விமானங்கள் வருகைக்கு ஹாங்காங் திடீர் தடை

0 1294
ஏர் இந்தியா விமானங்கள் வருகைக்கு ஹாங்காங் திடீர் தடை

ஏர் இந்தியா விமானங்கள் வருகைக்கு ஹாங்காங் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

சமீபத்தில் ஹாங்காங் வந்த 23 பேரில் கொரோனா பாதித்தவர்கள் 3ல் ஒரு பங்கு பயணிகள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏர் இந்தியா மற்றும் கேத்தே டிராகன் நிறுவன விமானங்கள் அடுத்த மாதம் 3ம் தேதி வரை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதமும் ஏர் இந்தியா இயக்கும் விமானங்களை ஹாங்காங் தடை செய்தது.

பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என சான்று இருப்பவர்கள் மட்டுமே ஹாங்காங்கில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments