கேரளாவில் வெளுத்து வாங்குகிறது கனமழை: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு

0 7990
கேரளாவில் வெளுத்து வாங்குகிறது கனமழை: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு

கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக இடுக்கி, கண்ணூர், மலப்புரம், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல ஊர்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கண்ணூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கன மழை பெய்யுமென இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இடுக்கி, மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதோடு, மழை காரணமாக இடுக்கி, கண்ணூர், மலப்புரம், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் மண் சரிவுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments