சதுரகிரிக்கு மஹாளய அமாவாசை தரிசனத்துக்கு வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 1579
சதுரகிரிக்கு மஹாளய அமாவாசை தரிசனத்துக்கு வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயிலுக்கு மஹாளய அமாவாசை தரிசனத்துக்கு சென்றவர்களில் 4 பேருக்கு கொரோனா உறுதியானது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு, கடந்த 4 நாட்களில் 16 ஆயிரத்து 380 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்களில் ஆயிரத்து 700 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில், 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அன்றைய தினம் தரிசனத்துக்கு வந்த பிற பக்தர்களும் பரிசோதனை செய்துகொள்ளும்படி மாவட்ட சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments