திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்காக இன்று முதல் தண்ணீர் திறப்பு

0 1534
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்காக இன்று முதல் தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த 16 பழைய வாய்க்கால் பாசன பகுதிகளான 26,653 ஏக்கர் பாசனப் பகுதிகளுக்கு குறுவை சாகுபடிக்காக 6048 மில்லியன் கன அடி நீரும், அமராவதி பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறும் 25250 ஏக்கர் புதிய பாசன பகுதிகளுக்கு 2661 மில்லியன் கன அடி நீரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி வரை தகுந்த இடைவெளி விட்டு திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அமராவதி அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments