சென்னையில் சாலையைக் கடக்க முயன்றவர் மீது சொகுசுக் கார் மோதி விபத்து

0 2455
சென்னையில் சாலையைக் கடக்க முயன்றவர் மீது சொகுசுக் கார் மோதி விபத்து

சென்னை தியாகராயநகர் வெங்கட்நாரயணா சாலையில் கடந்த புதன்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற பாஸ்கர் என்பவர் மீது அதே வழியாக வந்த கார் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் கவலைக்கிடமான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தை ஏற்படுத்திய நபர் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவியின் காட்சிகள் நேற்று வெளியாகி உள்ள நிலையில் விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுப்பதாக பாதிக்கப்பட்டவர் தரப்பில் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments