புல்வாமாவில் 3 தீவிரவாதிகள் கைது

0 999
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

ரஜோரி மாவட்டத்தில் ராணுவம் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் கொண்ட பாதுகாப்பு படையினர் ஆபரேசன் கருடன் பாலா என்ற பெயரில் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர்.

இந்நிலையில் புதிதாக தீவிரவாத இயக்கத்தில் இணைந்த ஒருவனையும் ஏற்கனவே தலைமறைவாக இருந்த புல்வாமாவைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளையும் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து இரண்டு ஏ,கே 56 இயந்திரத் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments