ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

0 5084
13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் ஆட்டத்தில், அம்பத்தி ராயுடுவின் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் ஆட்டத்தில், அம்பத்தி ராயுடுவின் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து விளையாடிய சென்னை அணி கடைசி ஓவரில் 4 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், 166 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

அம்பத்தி ராயுடு 48 பந்துகளில் 71 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். டூ பிளெஸ்ஸி 44 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தோனி ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments