தமிழ்நாட்டில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி..66 பேர் உயிரிழப்பு..!

0 2589
தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில்  புதிதாக 5 ஆயிரத்து 569  பேருக்கு , வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5  லட்சத்து 36  ஆயிரத்தை தாண்டி உள்ளது.

ஒரே நாளில் 5 ஆயிரத்து 556 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய நிலையில், இதுவரையில், குணமடைந்தோர் எண்ணிக்கை, 4 லட்சத்து 81 ஆயிரத்தை எட்டியுள்ளது.

கொரோனாவுக்கு, மேலும் 66 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரையில், பலியானோர் எண்ணிக்கை, 8 ஆயிரத்து 751 ஆக அதிகரித் துள்ளது. சென்னையில், புதிதாக 987 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

கோயம்புத்தூரில் 565 பேருக்கும், செங்கல்பட்டில் 293 பேருக்கும், கடலூரில் 289 பேருக்கும் ,திருவள்ளூரில் 282 பேருக்கும்,  புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments