ரூ.353 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

0 1424
ரூ.353 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 துணை மின் நிலையங்கள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறப்பு

353 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 25 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

எரிசக்தித் துறையின் சார்பில் ஈரோடு, சென்னை, கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகை, சேலம், தஞ்சை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 353 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 25 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக செயல்பட்டு, மின் கட்டமைப்பு அலகுகளுக்கு ஏற்ப, காற்றாலை மின்சாரத்தின் உற்பத்தி அளவை நெறிப்படுத்தும், சோதனை ரீதியான திட்டம் (Artificial intelligence based Active grid Network Management system) இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் செயல்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments