வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0 3070
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த  24 மணி நேரத்துக்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை  பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில், சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கன மழையும், வட கடலோர தமிழகம் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தேனி, திண்டுக்கல்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை மையம், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, தாமரைப்பக்கம் , புழல், பூண்டி பகுதிகளில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருப்பதாக கூறியுள்ளது.

வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் அப்பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அங்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களை அறிவுறுத்துவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments