செப்.21 முதல் 3501 அம்மா நகரும் ரேசன் கடைகளை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

0 1503
தமிழ்நாட்டில், வருகிற திங்கட்கிழமை அன்று, 3501 நகரும், அம்மா ரேசன் கடைகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், வருகிற திங்கட்கிழமை அன்று, 3501 நகரும், அம்மா ரேசன் கடைகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படும் இந்த அம்மா நகரும் ரேசன் கடைகள் குறித்து, சட்டப்பேரவையில், விதி எண், 110ன் கீழ், முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அத்திட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும், 3501 நடமாடும், அம்மா ரேசன் கடைகளை, வருகிற 21ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments