நாளை முதல், டிக்-டாக், வீ-சாட் செயலிகளை பதிவிறக்கம் செய்ய அமெரிக்கா தடை

0 895
சீன செயலிகளான டிக் டாக் மற்றும் வீ சாட்-ஐ நாளை முதல் பதிவிறக்கம் செய்ய, அமெரிக்கா தடை விதித்துள்ளது.

சீன செயலிகளான டிக் டாக் மற்றும் வீ சாட்-ஐ நாளை முதல்  பதிவிறக்கம் செய்ய, அமெரிக்கா தடை விதித்துள்ளது.

சீனாவின் பைட்டன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டாக் செயலி, அமெரிக்கர்களை உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டிய அதிபர் டிரம்ப், இம்மாத 15 ஆம் தேதிக்குள் அந்நிறுவனம் டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்கா விட்டால், தடை விதிக்கப்போவதாக எச்சரித்தார்.

இந்நிலையில், டிக்-டாக் செயலியை விற்க ஆரக்கிள் நிறுவனத்துடன் இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், நாளை முதல் டிக்-டாக்கை புதிதாக பதிவிறக்க அமெரிக்கா தடை விதித்துள்ளது.

மேலும், அமெரிக்கா வலியுறுத்திய பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றாவிட்டால், நவம்பர் 12 ஆம் தேதி முதல், டிக்-டாக் செயலிக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments