எல்லை நிலவரம் - ராணுவ உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை

0 1379
லடாக் எல்லையில் சீனப் படைகளை பின்வாங்கும்படி வலியுறுத்துவது குறித்து முப்படைத் தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார்.

லடாக் எல்லையில் சீனப் படைகளை பின்வாங்கும்படி வலியுறுத்துவது குறித்து முப்படைத் தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார்.

மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டுறவு மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீயுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் 5 அம்சத் திட்டத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டது.

அதில் உள்ளபடி சீனா தனது படைகளை பின்வாங்க இந்தியா கோரியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களில் இருநாடுகளின் கமாண்டர் மட்டத்திலான ராணுவ உயரதிகாரிகள் இப்பிரச்சினை குறித்து 6வது சுற்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். பேச்சுவார்த்தைக்கு முன்பாக நேற்று ராஜ்நாத்சிங் முப்படைத் தளபதிகள், ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

லடாக் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் ரோந்து செய்வதைத் தடுக்கும் வகையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சீனப்படைகள் அணிவகுத்து நிற்கின்றன. இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத்சிங் தாக்கல் செய்த அறிக்கையில் இந்திய ராணுவம் ரோந்துப் பணியை தொடர்வதை உலகில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

5 அம்ச அமைதி ஒப்பந்தத்தின்படி சீனப்படைகளை ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய நிலைக்குப் பின்வாங்க வலியுறுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது குறித்தும் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சீனாவின் வசம் இருந்த சில மலைச்சிகரங்களை இந்தியப் படைகள் மீட்டிருப்பதையடுத்து இந்தியாவின் குரல் ஓங்கியுள்ளது. இதற்கு சீனா பணியுமா என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments