செப்.28ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்.!

0 2004

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும், தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments