பெங்களூருவில் ஹெல்மெட்டில் மறைத்து ’பிரவுன் சுகர்’ கடத்திய இளைஞன் கைது

0 1534

பெங்களூருவில் ஹெல்மெட்டில் போதைப் பொருளை மறைத்து வைத்து கடத்திய நபர் கைது செய்யப்பட்டான்.

பிரவுன் சுகர் எனப்படும் போதைப் பொருள் சிட்டி மார்க்கெட் பகுதியில் அதிகளவில் புழங்குவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு மாறுவேடத்தில் ரோந்து சென்ற போலீசார், சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவனைப் பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அவனது ஹெல்மெட்டுக்குள் 90 கிராம் அளவிலான பிரவுன் சுகர் பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விக்ரம் கிலோரி என்ற அந்த இளைஞனை கைது செய்த போலீசார், அவனிடமிருந்து 6 ஆயிரம் ரூபாய் பணம், 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments