கொரோனா குறைந்து, அடுத்தாண்டு மத்தியில் தான் இயல்புநிலை திரும்பும் - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை

0 1598
தடுப்பூசி அறிமுகம் ஆனாலும், ஆகாவிட்டாலும், அடுத்தாண்டு மத்தியில் தான், கொரோனா பெருந்தொற்றுப் பரவல் குறைந்து, இயல்புநிலை திரும்ப வாய்ப்பிருப்பதாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி அறிமுகம் ஆனாலும், ஆகாவிட்டாலும், அடுத்தாண்டு மத்தியில் தான், கொரோனா பெருந்தொற்றுப் பரவல் குறைந்து, இயல்புநிலை திரும்ப வாய்ப்பிருப்பதாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பூசி அனைத்து சோதனைகளிலும் வெற்றிபெற்று, நீக்கமற கிடைக்கும் வரையில், கொரோனா பரவலைத் தடுக்க, மாஸ்க் அணிவதும், தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதும், கைகளை அடிக்கடி கழுவுவதும் அவசர, அவசியமானதும் என்றும் கூறியுள்ளது.

இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கான இரண்டாம் கட்ட பரிசோதனை நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளது. உலகளவில், எந்த தடுப்பூசியாக இருந்தாலும், அதன் பரிசோதனைகள், திட்டமிட்டப்படி, நன்முறையில் சென்றால், அவை அடுத்தாண்டு மத்தியில் தான் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பிருப்பதாகவும், எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments