சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரரை கடத்திக் கொன்ற மாவோயிஸ்ட்கள்...

0 1001

சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஆயுதப்படை வீரரை, மாவோயிஸ்டுகள் கடத்தி படுகொலை செய்தனர்.

அந்த மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டம் பட்டேடா கிராமத்தில் சத்தீஸ்கர் ஆயுதப்படையைச் சேர்ந்த ஒரு வீரர் கடந்த 7 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். அவர்களை மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் இன்று கிடைத்துள்ளது.

ஆயுதப்படை வீரரை மாவோயிஸ்டுகள் கொலை செய்து அவரது உடலை கங்காலூர்-பிஜப்பூர் சாலையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அவரது கொலைக்கு காரணமான மாவோயிஸ்டுகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments