விவசாயிகளை சிலர் தவறாக வழி நடத்த முயற்சிக்கிறார்கள் - பிரதமர் மோடி

0 2145
பல்வேறு சக்திகள் விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பல்வேறு சக்திகள் விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், விவசாயம் தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு,’ என்றார். நாட்டின் வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு இது முக்கிய தருணம் என்ற அவர், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும் என்றார். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதற்கு தான் உத்தரவாதம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்க வழிவகை செய்யும் என்ற அவர், இந்த விவகாரத்தில் பல்வேறு சக்திகள் விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments